குஷ்புவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கையா? இல்லையா? கருணாநிதி-ஸ்டாலின் இடையே பனிப்போர்
16 February 2013
குஷ்புவைத் தாக்கியவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதில் கருணாநிதி தீர்மானமாக இருக்கிறார்.
சென்னையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள், திருச்சி ஹோட்டலில் வைத்து குஷ்புவைத்
தாக்கியவர்கள் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் கருணாநிதி. அவர்களைக்
கட்சியை விட்டு நீக்கச் சொல்லி விட்டாராம். ஆனால், அதற்கு ஸ்டாலின்
சம்மதிக்கவில்லை. இதனால் திடீர் சத்தியாகிரகம் தொடங்கி விட்டாராம்.''
''நான்கைந்து
நாட்களாக அறிவாலயத்துக்கே கருணாநிதி வரவில்லை. வீட்டிலேயே முடங்கி விட்டார். தலைவர்
வருவார் என்று காலையும் மாலையும் வாசலை சுத்தமாக வைத்திருந்தே ஏமாந்து போனார்களாம்
மேனேஜர்கள். இதன் பிறகும் ஸ்டாலின் தரப்பு மசியவில்லை. பொறுமை இழந்தவராக
அறிவாலயத்துக்கு புதன்கிழமை வந்து விட்டார் கருணாநிதி.''
''ஸ்டாலின் துபாயில்
நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டதால் இரண்டு மூன்று
நாட்களாக சென்னையில் இல்லை. 'நடவடிக்கை எடுத்தால் இரண்டு தரப்பிலும்தான் எடுக்க
வேண்டும். உள்கட்சி விவகாரங்கள் பற்றி பத்திரிகையில் பேசியதால்தான் பிரச்னை வந்தது.
பேசியவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டுத்தான், பிரச்னை செய்தவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்டாலின் ஆதரவாளர்கள், 'இனி யாரும் இந்த விவகாரம்
குறித்து பேட்டியோ அறிக்கையோ விடக் கூடாது என்று தலைமைக் கழகம் அறிவித்த பிறகும்,
குஷ்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். இது தலைமைக் கழகத்தின்
கட்டுப்பாட்டை மீறிய செயல் இல்லையா? இதைத் தலைவர் கண்டிக்காதது ஏன்?’ என்று கேட்க
ஆரம்பித்துள்ளனர்.''
No comments:
Post a Comment