
பெட்டாலிங் ஜெயா- மலேசியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு நாளைக்கு 15 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் கால்வாசி பேர் 13லிருந்து 17 வயதுக்குட்பட்ட மலாய்க்கார பெண்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
காவல்த்துறைக்கு கிடைத்துள்ள புகார்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 4804 பேர் காணாமல் போனதாக புகார் கிடைக்கப்பட்டுள்ளது. இவர்களில் பாதிபேர் இன்னமும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011-ஆம் ஆண்டு 5961 பேர் காணாமல் போயுள்ளனர்.
சிதைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் விவாகரத்து ஆனவர்களின் பிள்ளைகள்தாம்ன அதிகளவில் காணாமல் போவதாக கூட்டரசு CID-யின் தலைமை இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமது பக்ரி சினின் தெரிவித்தார். குடும்ப பிரச்சனை மற்றும் சிதைந்த குடும்பத்திலிலுள்ள பிள்ளைகள் அதிகளவில் நண்பர்களின் தாக்கத்தினால் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களில் பலர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் ஆவர். இவர்களைத் தவிர, காதலர்களை நம்பி வீட்டை விட்டு ஓடி வரும் இளம்பெண்களும் அதிகம் என டத்தோ ஸ்ரீ முகமது பக்ரி சினின் தெரிவித்தார்.
இவர்களில் மலாய்க்கார பெண்களே அதிகம். கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 1124 மலாய்க்கார பெண்கள் காணாமல் போனதாக காவல்துறை புகார்ப் பட்டியல் குறிப்பிடுகிறது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் பலர் பாலியல் அடிமைகளாகவும் மனித கடத்தலுக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு காணாமல் போனவர்களைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உங்களில் ஒருவர் காணாமல் போனால், விரைவாக புகார் கொடுப்பது அவசியம். இதன்மூலம், காணாமல் போனவர்களை விரைந்து கண்டு பிடிக்க முடியும் என்றும் அவ்ர் தெளிவுறுத்தினார்
./vanakkammalaysia. thanks
No comments:
Post a Comment