
பெட்டாலிங் ஜெயா,
பிப்ரவரி 1 – நம் நாட்டில், நாள் ஒன்றுக்கு சுமார் 15 பேர் காணாமல் போகின்ற
சம்பவங்கள் நடப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அப்படி காணாமல் போகின்றவர்களுல்
முக்கால்வாசி பேர் 13 வயதிலிருந்து 17 வயதுக்கு உட்பட்ட மலாய் பெண்கள் என்று
தெரியவந்துள்ளது.
2012-ஆம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை மட்டும் 4804 பேர் காணாமல் போயிருப்பதாக புகார்
செய்யப்பட்டுள்ளது. இவர்களுல் பாதி பேரை இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த
எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டை காட்டிலும் 1157 பேர் குறைவு என்று காவல் துறை புள்ளி
விவரம் காட்டுகின்றது.
பெரும்மாலானோர், மன
அழுத்தம், சமூக பிரச்சனைகள் போன்ற காரணங்களால் காணாமல் போவதாக காவல் துறை
தெரிவித்துள்ளது. குறிப்பாக சிதைந்த குடுமபங்களில் உள்ள வயது பிள்ளைகள் வீட்டை
விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட
இந்த 13 வயதிலிருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் வீட்டை விட்டு வெளியேறுவதாக
தெரியவந்துள்ளது.
இப்படி வீட்டை விட்டு
வெளியேறுகின்றவர்கள் பாலியல் தொல்லைகளுக்கோ அல்லது கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள்
மிக்வும் அதிகம் என காவல் துறை எச்சரித்துள்ளது.
காணாமல் போகின்றவர்களை
கண்டுபிடிக்க “NUR” அழைப்பு சேவை முடக்கிவிடப்பட்டு காவல் துறை தீவிர நடவடிக்கைகள்
எடுத்து வந்தாலும், பெற்றோர்கள், பொதுமக்கள் அவரவர் பங்கை ஆற்றுவதனால் மட்டுமே இது
போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.
பிள்ளைகளிடம் அன்பாகவும்,
அவர்களின் சிந்தனை மற்றும் தேவை அறிந்து செயல்படுவது பெற்றோர்களின் கடமையாகும்.
பிள்ளைகளிடம் குறிப்பாக இளைஞர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துக் கொள்வதும் அல்லது
அதிகமான செல்லம் கொடுத்து வளர்ப்பதும் மிகவும் ஆபத்தானதே.
vanakkammalaysia. thanks
No comments:
Post a Comment