அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

ஆந்திராவில் ஆலங்கட்டி மழைக்கு 15 பேர் பலி


நகரி, பிப். 17-

ஆந்திராவில் பல மாவட்டங்களில் நேற்று சூறாவளி காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்தது. குண்டூர், பிரகாசம், நெல்லூர், அதிலாபாத், வரங்கல், கரீம் நகர், நிஜாமா பாத், ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை நேற்று வெளுத்து வாங்கியது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

இடியுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது சித்தூரில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 10 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தெலுங்கானா பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்,சோளம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியது.

ஆலங்கட்டி மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தக்காளி, உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அழிந்தது. மாமரத்தின் பூக்கள் அனைத்தும் உதிர்ந்தது. ஒரே நாளில் மழையில் 1 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் அடைந்துள்ளது. மேலும் இடிதாக்கியும் மின்சாரம் தாக்கியும் 15 பேர் பலியானார்கள்.

இடி தாக்கி குண்டூர், பிரகாசம், நிஜாமாபாத் மாவட்டத்தில் தலா 3 பேரும், சித்தூர், நெல்லூரில் தலா ஒருவரும் உயிர் இழந்தனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததில் அதிலாபாத், கரீம்நகரில் தலா ஒருவரும் உயிர் இழந்தனர். மழை இன்னும் 24 மணி நேரம் நீடிக்கும் என்று ஐதராபாத் வானிலை இலாகா அறிவுறுத்தி உள்ளது.

maalaimalar thanks

No comments:

Post a Comment