அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது : எப்படி?


சென்னை, பிப். 17-

காபி பிரியர்களில் பலவகை உண்டு. ஃபில்டர் காபி பிரியர்கள், கேப்புச்சீனா காபி பிரியர்கள், எக்ஸ்பிரசோ காபி பிரியர்கள், கோல்ட் காபி பிரியர்கள் என இவர்கள் பல்வேறு வகையான காபியின் சுவைக்கு அடிமையாகிப் போய் உள்ளனர். காபியில் உள்ள 'கெஃபைன்' என்ற மூலப்பொருளின் தீமை குறித்து இவர்கள் சரியாக அறிந்துக் கொள்ளாமல் உள்ளனர்.

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காபி பழக்கத்தில் இருந்து விடுபட்டு தேனீர் அருந்துவதால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுறுசுறுப்பு பானமாக கருதப்படும் தேனீரின் சில நற்குணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அதன்படி, இளவயது முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து தேனீர் நம்மை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் மார்பு அதிர்வு நோய் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரத்த நாளங்களை இலகுவாக்கி அடைப்புகளை நீக்குகிறது.

பாலுடன் சேர்த்து அருந்தாத போதிலும், தேனீருக்கு மட்டுமே கூட எலும்புகளை திடமாக்கும் ஆற்றல் உண்டு. எலும்பு மற்றும் பல் காரைகளை தடுக்கும் புளோரைடு அதிகம் கொண்ட தேனீர் எலும்புகளை பாதுகாக்கிறது. சர்க்கரை சேர்க்காத தேனீரை பருகுவதன் மூலம் பல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் பெருகும்.

புற்று நோய்க்கு எதிராக போராடவல்ல உணவு சார்ந்த ஒரே பொருளாக தேனீர் மட்டுமே கருதப்படுகிறது. அதிகமாக அருந்தாதவரை உடலில் ஏற்படும் நீரிழப்பை கட்டுக்குள் வைத்து சோர்வடையாதபடி தேனீர் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத தேனீர், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. உணவுப் பொருட்களில் உள்ள சக்தியை உடலுக்கு தேவையான ஆற்றலாக கடத்தும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகரிக்கிறது.

நாள்தேறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எங்கே கிளம்பிட்டீங்க...? தேனீர் பருகத் தானே...? 

.maalaimalar. thanks

No comments:

Post a Comment