அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 2 February 2013

ஒரு நாளைக்கு 22 அமெரிக்க முன்னாள் படையினர் தற்கொலை


ஒரு நாளைக்கு 22 அமெரிக்க முன்னாள் படையினர் தற்கொலை

February 3, 2013  08:04 am

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசாங்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.


ஒரு நாளைக்கு சராசரியாக 18பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும். சுமார்60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவரையிலான ஆய்வுகளில் மிகவும் பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின்படி,இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

1990 ,உதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், தற்கொலை செய்துகொள்ளும் அமெரிக்க முன்னாள் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கூறும், இருவாரங்களுக்கு முன்னர் வெளியான தகவல்களை உறுதி செய்கின்றன.

இதனை தடுப்பதற்கு வியட்நாம் போரில் கலந்துகொண்டவர்கள் மற்றும் பெண் இராணுவ வீராங்கனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிலர் இராணுவத்தில் இருந்து விலகி முதல் சுமார் 4 வாரங்களில் தற்கொலை செய்வதற்கான சாத்தியம் அதிகம் என்றும், அந்தக் காலப்பகுதியில், பலமான கண்காணிப்பும், விடய முகாமைத்துவமும் தேவை என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் அளவுக்கு அதிகமாக போதை மருந்தை உட்கொள்ளல் அல்லது விசம் அருந்துதல் ஆகியவை மூலமே தற்கொலைசெய்து கொள்கிறார்கள்.

இவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதேவேளை இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்து 26,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறுகிறது.

இந்த தகவல்களை தற்கொலைகளை தடுப்பதற்கான தமது நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தாம் பயன்படுத்துவோம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.

thamilan thanks

No comments:

Post a Comment