Saturday, 02 February 2013 22:13

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ப.சண்முகம் தனது 84வது வயதில் காலமாகியுள்ளார்.
காரைக்காலை ஒட்டிய நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்த ப.சண்முகம் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரித் தலைவராக சுமார் இருபது ஆண்டு காலம் இருந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய தேசியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த புதுவை அரசியல் தலைவர் இவர்.
புதுவையின் முதல்வர், புதுவைத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் , புதுச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினர் என பல்வேறு நிலைகளில் புதுச்சேரி அரசியலில் சண்முகம் பெரும் பங்காற்றியுள்ளார். எளிமையான அரசியல்வாதி என்றும் பெயர் பெற்றவர் அவர்.
திருமணம் செய்து கொள்ளாத சண்முகம், அண்மைய ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி நெடுங்காட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்துவந்தார். படியேறும்போது கீழே விழுந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி காலமானார். மத்திய அமைச்சரான ஜி.கே வாசன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment