சீனாவில் பட்டாசுகள் வெடித்ததில் லொறி கவிழ்ந்தது: 26 பேர் பலி
[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 07:12.52 மு.ப GMT ]
சீனாவில் மத்திய பகுதியில்
லியான்யங்காங் மற்றும் கோர்காஸ் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லொறி சென்றது.
மியான்ஷி என்ற இடத்திலுள்ள பாலத்தின் மீது குறித்த லொறி செல்லும் போது
திடீரென்று பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் பாலம் சுமார் 80 மீற்றர்
நீளத்திற்கு உடைந்து விழுந்தது. அதில் சென்ற 6 வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு
நொறுங்கின.
இந்த கோர விபத்து நேற்று காலை 8.52 மணி அளவில் நடைபெற்றதாகவும் இதில் 26 பேர்
பலியானதாகவும் சீன தேசிய ரேடியோ அறிவித்தது.
தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று
மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பலரை காப்பாற்றி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment