பதவி விலகினார் ஹிலாரி கிளிண்டன்: அடுத்த அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்பு
[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 05:50.45 மு.ப GMT ]
அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் இருந்து
வந்தார்.
4 ஆண்டுகள் இப்பதவி வகித்த அவர் ஒபாமா 2வது முறை ஜனாதிபதியான பின்பு இப்பதவியில்
தொடர விரும்பவில்லை.
எனவே 65 வயதான அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நேற்று
விலகினார். இதையொட்டி அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது.
ஹிலாரி கிளிண்டன் பதவி விலகியதை தொடர்ந்து புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக 69
வயதான ஜான்கெர்ரி நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று அவர் பாஸ்டனில் நடந்த விழாவில் முறைப்படி அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எலீனாக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் அவரது மனைவி தெரசா ஹெய்ன்ஷ் கெர்ரி, மகள் வனீஸ்கா, சகோதரர் கேமரூன்
மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கெர்ரி இந்த பதவி ஏற்பின் மூலம் நான் மிகவும் கவுரவப்
படுத்தப்பட்டு இருக்கிறேன். மதிப்புமிக்க இப்பணியை சிறப்பாக செய்வேன் என்றார்.
இவர் வருகிற திங்கட் கிழமை காலை 9 மணிக்கு தனது அலுவலகத்தில் பணிகளை
மேற்கொள்கிறார். கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது இவர் ஜனநாயக கட்சியின்
வேட்பாளராக ஜார்ஜ் புஷ்சை எதிர்த்து போட்டியிட்டார்.
ஜனாதிபதி ஒபாமாவுக்கு நெருக்கமான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில்
உள்ளார். தற்போது மகாசூசெட் மாகாண செனட் உறுப்பினராக இருக்கிறார்.
No comments:
Post a Comment