அமெரிக்காவின்
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் உடல் நிலை காரணமாக சமீபத்தில்
பதவியிலிருந்து விலகினார்.
தற்போது அவர் மேடைப் பேச்சாளராக மாற உள்ளார். இவர் ஒரு முறை பேசுவதற்கு 2 லட்சம்
டொலர் சம்பளமாக (ரூ.1 கோடி 9 லட்சம்) பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அளவு அவர் சம்பளம் பெற்றால் அமெரிக்காவில் ஒருமுறை மேடையில் பேச அதிக பணம்
பெறும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக இருப்பார்.
ஹிலாரி சேவை நிகழ்ச்சிகளில் இலவசமாகவே பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது 1,86,000 டாலர்களை (இந்திய மதிப்பில்
ரூ.1,01,31,000/-) சம்பளமாகப் பெற்றார்.
நியூயார்க்கிலுள்ள ஹர்ரி வாகர்ஸ் என்ற நிறுவனம் இவரது மேடை பேச்சுக்கான
ஏற்பாடுகளை செய்கிறது. இவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான
கிளிண்டனுக்கும் இந்நிறுவனமே மேடை பேச்சுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கடந்த 11 வருடங்களில் கிளிண்டன் இது போன்று 471 மேடைப் பேச்சுகளில்
பங்கேற்றுள்ளார். இதில் ஒரு பேச்சுக்கு சராசரியாக 1,89,000 டொலர்களை அவர்
பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment