அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 February 2013

அடுத்த கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 185 கூடுதல் இடங்கள்: சென்னை மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் அதிகரிப்பு


சென்னை, பிப். 22-
தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளும் 12 தனியார் மருத்துவ கல்லூரிகளும் தற்போது உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மார்க் மற்றும் இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடுமையான போட்டி ஏற்படுகிறது. அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற கட்-ஆப் மார்க் அதிகமாக இருக்க வேண்டும். 0.25 கட்-ஆப் மார்க்கில் எத்தனையோ பேர் மருத்துவ படிப்பை இழக்கிறார்கள். வரும் கல்வி ஆண்டில் 185 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியை இந்த ஆண்டு திறக்க முழு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கல்லூரியின் மூலம் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கிறது.
சென்னை மருத்துவ கல்லூரியில் தற்போது 165 இடங்கள் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்தில் சென்னை மருத்துவ கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் புதிய மருத்துவ கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது. உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற கூடுதல் இட வசதியும் புற நோயாளிகள் சிகிச்சைக்கான வசதியும் அங்கு விரிவாக செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளளர்.

சென்னை மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்தை ஒரு சில நாட்களில் இந்திய மருத்துவ கழகம் ஆய்வு செய்ய வருகிறது. இந்த ஆய்வு வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் உள்ளது. அதனால் கூடுதலாக 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.
இந்தியாவிலேயே 178 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி 'மெட்ராஸ் மருத்துவ கல்லூரியாகும்' அரசு மருத்துவ கல்லூரியில் அதிக எம்.பி.பி.எஸ். இடங்கள் கொண்ட பெருமையை இக்கல்லூரி பெற்றுள்ளது. 250 எம்.பி.பி.எஸ். மாணவர்களை சேர்க்கும் தகுதி கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கான அனைத்து வசதிகளும், டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை, ஆகஸ்டு மாதம் நடைபெறும் மருத்துவ கவுன்சிலின் போது இக்கல்லூரி அந்த “அந்தஸ்தை” பெற்று விடும் என்று முதல்வர் கனகசபை நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய மருத்துவ கல்லூரி கட்டிடத்தை விரைவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறப்பார் என்று கூறப்படுகிறது.

news  maalaimalar thanks

No comments:

Post a Comment