அமெரிக்காவில் 2 மாணவர்களை கொலை செய்தவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 05:58.40 மு.ப GMT ]
அமெரிக்காவின் ஜார்ஜியா
மாவட்டத்தில் கடந்த 1995ம் ஆண்டு ஜுலியட் ஏரியின் ஓரம் காரில் அமர்ந்தபடி
பேசிக்கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக 38 வயதான ஆண்ட்ரு ஆலன் குக் என்பவரை கைது செய்த பொலிசார்
அவர் மீது ஜார்ஜியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குற்றவாளிக்கு மரண தண்டனை
வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு
தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஆண்ட்ரு ஆலன் குக்-கிற்கு நேற்று மரண தண்டனை
வழங்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் நடைமுறை கடந்த யூலை மாதம்
ஒழிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, 3 மயக்க மருந்துகளின் கலவையை மரண தண்டனை கைதிகளின்
உடலில் ஊசியின் மூலம் செலுத்தி கொல்லும் புதிய நடைமுறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று ஆண்ட்ரு ஆலன் குக்-கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ
ஊசி போடப்பட்ட பின்னர், இரவு 11.22க்கு அவரது உயிர் பிரிந்ததை சிறை மருத்துவர்
உறுதிபடுத்தினார்.
No comments:
Post a Comment