அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 22 February 2013

'இலவச உணவு கொடுத்தால் இந்தியர் வாக்குகளைப் பெற முடியும்' : மலேசிய நண்பன் செய்திக் கருத்துக்கு எதிர்ப்பு




நாட்டின் முன்னணி  மக்கள் ஏடான மலேசிய நண்பன் பத்திரிகை அலுவலகத்தில்  நேற்று அத்துமீறி நுழைந்த மமுகவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ கேவியஸும் அவரது  கட்சி உறுப்பினர்களும் அமளி துமளியை ஏற்படுத்தியதோடு சுமார் 4 மணி நேரம் நண்பன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த சில வாரங்களாக நாட்டின்  அரசியல் கட்சியின் முந்தைய, தற்போதைய நிலையை  விமர்சித்து ஏவுகணை என்னும் கட்டுரைத் தொடர் நண்பனில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் (20-02-2013) புதன் கிழமை மலேசிய நண்பனில் 'அரசியல் கட்சியின் சித்தாங்களும் மலேசிய இந்தியர்களின் எதிர்காலமும்' எனும் தலைப்பில்  'ஏவுகணை' செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அச்செய்தியில் மமுக  இந்தியர்களை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்தும் கட்சி என்பதுடன் அறுசுவை உணவுடன் ஆட்டிறைச்சி  கலந்து பரிமாறினால் அவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய சமுதாயத்தை மிகவும் மலிவாக எடை போட்டவர் டத்தோஸ்ரீ கேவியஸ்தான் என்று செய்தி வெளிவந்திருந்தது. இலவச உணவு கொடுத்தால் இந்தியர் வாக்குகளைப் பெற முடியும் என ம.மு.க. கருதுகிறதா என்ற விமர்சன அடிப்படையில் இக்கருத்து அமைந்திருந்தது.

இச்செய்திக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜாலான் ஈப்போவிலுள்ள மலேசிய நண்பன் தலைமையகத்தை  கேவியஸும் அவரின் கட்சி உறுப்பினர்களும் முற்றுகையிட்டதோடு அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

அதன் பிறகு பத்திரிகை முகப்பிடத்திற்கு வந்த அவர்கள், ஆபாச வார்த்தைகளில் கோஷமிட்டதுடன் 'யார் அந்த அந்நியன்' என பல முறை முரட்டுத்தனமாக ஒரே கேள்வியை எழுப்பினர். அவர்களின் அதிரடி நடவடிக்கையில் திக்குமுக்காடி போன தொலை பேசி பொறுப்பாளினி உடனே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், அங்கு விரைந்த நிர்வாக பொறுப்பாளர் குழுவினருடன் நிர்வாக  இயக்குநர்கள் அகமட் மைடின், டத்தோ ஷாபி ஜமான் ஆகியோர் கூட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தவும் முயன்றனர்.

ஆனால் இவர்களின் பேச்சு வார்த்தை சமரச முடிவுக்கு வராததாலும் மமுக உறுப்பினர்களின் அத்துமீறிய நுழைவினால் நண்பன் பணியாளர்களின்  வேலைக்கு இடையூறு நேர்ந்த சூழ்நிலையாலும் காவல் துறையினரின் ஒத்துழைப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


அதுமட்டுமின்றி, அப்போதுதான் வேலைக்கு வந்த நண்பனின் புகைப்பட கலைஞர் எல்.கே.ராஜ் மீது அடையாளம் தெரியாத ஒரு சில மமுக உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தினர். அவற்றுடன் நண்பனின் இயக்குநர் டத்தோ ஷாபிக்கின் கைபேசியையும் அவரின் அனுமதியின்றி பறித்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து, மாலை 4 மணியளவில்  அங்கு விரைந்த 20க்கும் மேற்பட்ட காவல் துறை உயர்மட்ட அதிகாரிகள் நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததோடு இருதரப்புக்கும் இடையில் சமரசப் பேச்சுக்கு வழி வகுத்தனர்.

ஆனால், இந்த பேச்சு வார்த்தைக்கு சற்றும் இசையாத டத்தோஸ்ரீ கேவியஸ் 'யார் அந்த அந்நியன்' என்ற கேள்வியை எழுப்பியதுடன் அச்செய்திக்கான ஆதாரத்தையும் அளிக்குமாறு  பிடிவாதமாக இருந்தார்.

இவர்களின் அத்துமீறல், நண்பன் பணிகளுக்கு நேற்று பெரும் இடையூறை ஏற்படுத்தியது.

அதன் பிறகு, அங்கு வந்த சேர்ந்த  செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தின்  துணைத் தலைவர் டிஎஸ்பி ஹாபிபி மா ஜிஞ்ஜியும், போலீஸ் உயர் அதிகாரி ஞானசேகரனும் தலையிட்டு இருதரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வழி வகுத்தனர்.

மமுக குறித்து எந்தவொரு எதிர்மறையான செய்தியை  வெளியிட்டாலும்  இனி மலேசிய நண்பன் நாளேட்டுக்கு எதிராக மிக பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ம.மு.க.வினர் எச்சரிக்கை விடுத்தனர்.  சுமார் மாலை 7 மணியளவில் டத்தோஸ்ரீ கேவியஸும் அவரது கட்சியின் உறுப்பினர்களும் பலத்த கோஷமிட்டவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

- 4தமிழ்மீடியாவுக்காக படங்கள், தகவல் : இளவரசி (மலேசியா) thanks


No comments:

Post a Comment