இரண்டே ஆண்டுகளில் ரூ.3,536 கோடி ஊழல். தாய்லாந்து தீவை விலைக்கு வாங்கிய முன்னாள் முதலமைச்சர்.
17 February 2013
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா,
அரசு பணத்தின் மூலம் தாய்லாந்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். ஹவாலா பணம்
மூலம் அரசு பணம் இத்தீவை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மது கோடாவுக்காக அவரது நெருங்கிய உதவியாளர்
அனில் பஸ்தவதே இந்த தீவை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு
தொடர்பாக கடந்த மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட அனில் பஸ்தவதே மூலம்
இத்தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி
அருண்குமார் தலைமையில் கடந்த மாதம் அனில் பஸ்தவதேயைத்தேடி தாய்லாந்து சென்ற
இக்குழுவினர், தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அன்னியச் செலாவணி மோசடி மூலம் ஜார்க்கண்ட்
மாநிலத்திலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ராஞ்சியைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் தாய்லாந்தில் உள்ள நான்கு
தீவுகளுக்குச் சென்று பார்வையிட்டு அங்கு விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 24-ம்
தேதி அங்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகப்படும்படியான நிறுவனங்களிடமும்
விசாரணை நடத்தியுள்ளனர். கோடாவின் உதவியாளர் முதலீடு செய்ததாகக் கூறப்படும்
நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் லைபீரியா
சென்றனர். அங்கு கிடைத்தத் தகவல்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
பஸ்தவதேயிடம் நடத்தப்பட்ட விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் முடிந்தது. மேலும் அடுத்த மாதம் இக்குழுவினர் ஸ்வீடன் செல்ல
உள்ளனர். இங்குள்ள நிறுவனங்களில் மதுகோடாவின் நெருங்கிய சகாக்கள் ரூ. 200 கோடி வரை
முதலீடு செய்திருப்பார்கள் என தெரியவந்துள்ளது. துபையில் 9 சொகுசு இல்லங்களை மது கோடா
வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 222 கோடியாகும்.
இந்த சொகுசு இல்லங்கள் வாங்குவது தொடர்பான விவகாரம் முழுத் தொகையை செலுத்தும்
முன்பாக வெளியானது. அனில் பஸ்தவதே மூலம் ரூ. 75 கோடி தொகை
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுகோடாவின் இரண்டாண்டு ஆட்சியில் ரூ. 3,536
கோடி தொகை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ரியல்
எஸ்டேட், சுரங்கத் தொழில் உள்ளிட்ட தொழில்களில் இத்தொகை முதலீடு
செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரூ. 120 கோடி மதிப்பிலான மதுகோடாவின்
சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். மதுகோடா மட்டும் ரூ. 1,340 கோடி அரசு நிதியை
தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தனது நெருங்கிய சகாக்கள் மூலம் இவர்
ரூ. 2,000 கோடியை வெவ்வேறு நாடுகளில் முதலீடு செய்திருப்பதாகத்
தெரிகிறது. thedipaar thanks
No comments:
Post a Comment