அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 25 February 2013

83 மில்லியன் ஆண்டுகள் வரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம் கண்டுபிடிப்பு!



on 25 February 2013.
இந்தியாவிலிருந்து மதகாஸ்கர் நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 முதல் 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா (Mauritia) என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு சிறிய கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப்பெருங்கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில்...

கடலுக்கு அடியில் உள்ளதாக கூறியுள்ளனர். மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லியனிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும் மினரல், இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்ந்துள்ளனர். இந்த சிறிய தாதுத் துகள்கள் குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்லப்படுகிறது.


இந்த சிர்கோன் துகள்கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த சிறிய மொரிசியா கண்டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது. பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்துவிட்டன என்றும் கூறியுள்ளனர்.


இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு பாறை அடுக்கு, தெற்கில் கோண்டுவானாவாகவும் வடக்கில் லாரேசியா எனவும் பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டுகள் இடைப்பட்ட காலங்களில், பிரிந்து மதகாஸ்கர், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா என மாறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 News : Source

/eutamilar. thanks

No comments:

Post a Comment