- Friday, 01 February 2013 07:24

இன்று காலை இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக்கூட்டத் தொடர் துவங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதாலேயே, ஆளுநர் ரோசய்யா உரையுடன் துவங்கியது.
காலை 9.55 மணிக்கே சட்டபேரவை வளாகம் வந்த ஆளுநர் ரோசய்யாவை, சபாநாயகர் தனபால் மரியாதை நிமித்தம் வளாகத்தினுள் அழைத்து சென்று அமரவைத்தார். பின்னர் ஆளுநர் பொருளாதார சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருவது குறித்து உரையாற்றினார். ஆளுநரின் உரையை தமிழாக்கம் செய்து ஒருவர் வாசிக்க, ஆளுநரின் உரை முடிந்தது.
இந்த கூட்டத் தொடர் ஒருவாரகாலம் வரை நடக்கும் என்றும் தெரியவருகிறது. வரும் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர், திங்கள் அன்று தொடங்க இருக்கும் கூட்டத் தொடரின் திங்கள் அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி சொல்வதும் தீர்மானங்கள் பற்றிய விவாதமும் நடக்கும் என்றும் தெரிய வருகிறது.
நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மின்வெட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் என்று அலசி ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் படும் என்றும் தெரியவருகிறது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment