
இலண்டனில் பிறந்து அவுஸ்திரேவியாவில் வாழும் விமானி ஒருவர்
பிளாஸ்டிக் கழிவினால் தயாரிக்கப்படும் எரிபொருளைக் கொண்டு நீண்ட தூர
விமானப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறார்.
விமானி
ரோசெல்(Rowsell) தனது விமானத்தில் ஐந்து தொன் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி
அதிலிருந்து கிடைக்கும் ஆயிரம்
காலன் எரிபொருளை கொண்டு ஆறு நாட்கள் விமானத்தை ஓட்ட திட்டமிட்டுள்ளார்.
வருகின்ற யூலை மாதம் சிட்னியிலிருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட
செங்னா 172 என்ற விமானத்தில் மணிக்கு 115
மைல் என்ற வேகத்தில் புறப்பட்டு ஆசியா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகள் வழியாக ஐரோப்பா சென்று
இறுதியாக இலண்டன் வந்து
சேரவுள்ளார்.
போகும்
வழியில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே சேகரித்துக் கொண்டு அதிலிருந்து பயணத்திற்கு தேவையான எரிபொருளை
பைராலிஸிஸ் முறைப்படி தயாரிப்பதால் இது காற்றை அசுத்தப்படுத்தாது என்று கூறும்
ரோசெல் இந்தத் தனிப்பயணத்தைத் துணிச்சலுடன் ஆறுநாட்கள்
மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்
இதற்கு முன்னர் தனியாக விமானம் ஓட்டிச் சென்ற சர்சார்லஸ் கிங்ஸ்போர்டு ஸ்மித்(Sir
Charles Kingford Smith) மற்றும் பெர்ட் ஹிங்க்லர்(Bert
Hinkler) போன்றோர் ஆபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
thamilan. thanks
No comments:
Post a Comment