அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 February 2013

உற்பத்தி திறனில் பின் தங்கும் மலேசியர்கள்



உற்பத்தி திறனில் பின் தங்கும் மலேசியர்கள்


நம்மில் பலரும் தினமும் அலுவலகத்தில் பலமணிநேரங்களை செலவழிப்பதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், அந்த பலமணிநேரங்களில் எவ்வளவு நேரம் நாம் பணியிட உற்பத்திக்காக பங்காற்றுகிறோம் என ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அத்தகைய ஓர் ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டதில் மலேசியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பொழுது போக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாம் உற்பத்தித் திறனில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பகிங்கர உண்மையை மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு தனது ஆய்வின் வழி போட்டு உடைத்துள்ளது.
அவ்வகையில், சமூக வலைதளங்கள் அல்லது இணையத்தில் 2 மணிநேரங்களும், மதிய உணவு, சிகரெட் மற்றும் தேநீர் அருந்துவதற்கு 2 மணிநேரங்களையும் செலவழிக்கும் நாம் சுமார் 4 மணிநேரங்கள் மட்டுமே பணியில் மும்முரம் காட்டுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் மலேசிய தொழிலாளர்கள் ஆண்டொன்றுக்கு RM 43,952 ரிங்கிட் மதிப்பிலான உற்பத்தியைப் பதிவு செய்துள்ளதாக கூறிய மலேசிய உற்பத்தி சங்கத்தின் இயக்குனர் டத்தோ முகமது ரசாலி உசேன், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா இந்த எண்ணிக்கையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக மற்றொரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார்.
சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் மலேசியர்கள், உற்பத்தித் திறனில் இன்னமும் தொலைதூரத்தில் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.
கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட சில உலக நாடுகளில் 2011/2012-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் உற்பத்தித் திறன் மதிப்பைக் காணலாம்:

நாடுகள்
மொத்த உற்பத்தி மதிப்பு (RM)
மலேசியா
RM43,952
அமெரிக்கா
RM285,558
ஜப்பான்
RM 229568
யு.கே
RM 207,040
ஹாங்கோங்
RM 201,485
சிங்கப்பூர்
RM 172,202
தைவான்
RM135, 491
தென்கொரியா

vanakkammalaysia thanks

No comments:

Post a Comment