மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை
அறிக்கை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாளுக்கு நாள் கூடி வரும் கோபம் கடுமையான மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது என மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறோம்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசும் டீசல் விலை லிட்டருக்கு ஐம்பத்து ஐந்து காசு கூடுதலாக மக்களின் மேல் பாரமாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், சிறு தொழில் அதிபர்கள், பெரிய தொழிற்சாலைகள் உள்பட பெரும் பாதிப்பினை சந்திக்கும். பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து செலவுகள் தன்னிச்சையாக உயரும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்படுவதும் அதன் சுமைகள் அப்பாவி இந்திய மக்கள் மீது ஏற்றப்படுவதும் தொடரும் அவலமாகி விட்டது.
விலை ஏற்றத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் எனக் கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணய கட்டுப்பாட்டினை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு கையகப்படுத்தி மக்கள் நலன் சார்ந்த முறையில் விலை குறைப்பு செய்யவேண்டும்.
2004ஆம் ஆண்டு முதன் முதலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்த போது பெட்ரோலின் விலை 37.84 ஆக இருந்தது. இன்று நூறு சதவீதத்திற்கும் அதிகமான விலை ஏற்றத்தை மத்திய அரசு சுமத்தியுள்ளது.
இதனிடையே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசு எடுக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமியின் அறிவிப்பு வன்மையாக கண்டித்தத்தக்கது. மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பெட்ரோல் விலையேற்றம், அதனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மக்கள் புரட்சிக்கு வழிவகுத்து விடக்கூடாது என்றும் எச்சரிக்க விரும்புகிறோம்.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், மமக

No comments:
Post a Comment