
சென்னை, பிப்.16-
லட்சத்தீவு பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று
தென்கிழக்கு அரபிக்கடலுக்கு நகர்ந்து நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 2
நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும்.
நேற்று தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒருசில
இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. நீலகிரியில் 5 செ.மீ. மழையும், எண்ணூர்,
மகாபலிபுரத்தில் 2 செ.மீ. மழையும், தாம்பரம், மீனம் பாக்கம், கிண்டி, மயிலாப்பூர்,
குன்னூரில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு ரமணன் கூறினார்.
maalaimalar thanks
No comments:
Post a Comment