- Saturday, 02 February 2013 08:46

ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதற்காக அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் பேருந்தில் 23 வயது கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
நீதிபதி வர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்த மத்திய அரசு, புதிய சட்டத்திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குமாறு பணித்தது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஓர் அவசர சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் படி இதுவரை நிலவிவந்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்ய இந்த அவசர சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த அவசர சட்டத்தின் படி பாலியல் தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனையை 7 ஆண்டுகளிலிருந்து, ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிட் வீசுவதை தனிக்குற்றமாக கருதி குறைந்ததது 7 ஆண்டுகளிலிருந்து அவரது ஆயுள்காலம் வரை தண்டனை வழங்குதல், மேலும் ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்த சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவும் புதிய சட்டம் இடமளிக்கிறது.
.4tamilmedia. thanks
No comments:
Post a Comment