மதச்சார்பற்ற தேசத்தைத் தேடிச் செல்
வேன்’ என்று, கமல் உருக்கமாகச் சொன்னது, முஸ்லிம் சமூகத்திலும் அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் கமலுக்கு ஆதரவு நிலையையும், மற்றவர்கள் தாங்கள்
எடுத்த எதிர்ப்பு முடிவிலும் உறுதி யாகவும் இருக்கின்றனர்.
கமலைச் சந்தித்துப்
பேசி இருக்கும் காங் கிரஸ் எம்.பி. ஆரூணிடம் பேசினோம். ''முஸ் லிம்கள் சினிமாவுக்கு
எதிரானவர்கள் கிடையாது. 'விஸ்வரூபம்’ விவகாரத்தில் எங்கள் சமூகத்துக்கு கெட்ட பெயர்
ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் கமலைப் பார்த்தோம். கமல் வியாபார ரீதியில் படம்
எடுக்கிறார். அதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை விட்டே
வெளி«யறுகிறேன் என்று கமல் வருந்தும் நிலைக்கு நாம் அவரைத் தள்ளி இருக்கிறோம்.
'விஸ்வரூபம்’ விவகாரம் இப்போது திசை திருப்பப்படுகிறது. 'துப்பாக்கி’ படத்தில்
ஆட்சேபகரமான காட்சிகள் இருந்ததால் நீக்கச் சொன்னோம். அதேபோல், இந்தப் படத்திலும்
அப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதை நீக்க கமல் தயாராகத்தான் இருக்கிறார். நான்
கமலைச் சந்தித்துப் பேசியதைக் கூட சிலர் குற்றம் சாட்டு கிறார்கள். ஆனால் அதில்
எந்தத் தவறும் இல்லை'' என்றார் தைரியமாக.
நடுநிலையான
கருத்துக்களைப் பதிவு செய்யும் கவிஞர் இன்குலாப், இந்த விவகாரத்தில் என்ன
சொல்கிறார்? ''கருத்துச் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. கருத்தில்
தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். எதிர்மறையான கருத்துகளை முன் வைக்கலாம்.
அதற்காக, கருத்தை முடக்குவது தவறு. கருத்துச் சுதந்திரம் பற்றி கமல்
போன்றவர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை. கதா நாயகன், வில்லன் என்ற சினிமா
கருத்துக்கள்தான் கமல் சினிமாவிலும் பிரபதிபலிக்கிறது. படத்தில் சித்திரிப்புகளை
உரு வாக்கும் போது வேறுபட்ட பார்வை கமலுக்கு இல்லை. தீவிரவாதத்தைக் காட்டுவதாகச்
சொல்லிவிட்டு அதன் புனைவுகளைத்தான் சொல்ல முற்படுகிறார். இதை 'குருதிப்புனல்’
படத்திலேயே பார்த்து விட்டோம். தொடர் நிகழ்வுகள்தான் முஸ்லிம்களை இந்த அளவுக்கு
கோபப்பட வைத்திருக்கிறது. மதச்சார்பற்ற நாட் டைத் தேடுகிறேன் என்று அவர் சொல்வதை
வைத்துப் பார்க்கும் போதே அவர் மதச்சார்புள்ள நிலையில்தான் இருக்கிறார் என்பது
தெரிகிறது. மதவெறிச் சித்திரிப்புகளைப்
படத்தில் காட்டி இருந்தால் அதற்காக எழும் போராட்டத்தை அவர் எதிர்கொள்ளத்தான்
வேண்டும்'' என்கிறார் ஆணித் தரமாக.
முஸ்லிம்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹி
ருல்லாவிடம் பேசினோம். ''தன்னுடைய பெயரில் ஹாசன் என்று இருப்பதால் சில
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் கமலுக்கு நேர்ந்த அவமானத்தைக் கமல் மறந்து
விட்டாரா? அப்துல் கலாமுக்கும் ஷாருக்கானுக்கும்கூட இதுபோன்ற அவமானங்கள் ஏற்படும்
போதும் சாதாரண முஸ்லிம்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். எங்கள் வலியை அனுபவமாக
அறிந்த பிறகும் கமல் எங்களைக் காயப்படுத்தலாமா? அவர் நஷ்டம் அடைய வேண்டும் என்பது
எங்கள் நோக்கம் அல்ல. 'உன்னைப் போல் ஒருவன்’ படம் வந்தபோதே அதில் சில காட்சிகள்
எங்களை பாதிப்பதாக இருந்ததை அவரிடம் முறையிட்டோம். 'முஸ்லிம்களை உயர்வாகச்
சித்திரித்து நிச்சயம் ஒரு படம் எடுப்பேன்’ என்று எங்களிடம் சொன்னார். அதுதான்
'விஸ்வரூபமா’? முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கூடங் குளம்
விவகாரத்தையும், குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என எவ்வளவோ விஷயங்கள்
இருக்கிறதே... அதை எல்லாம் எடுக் கலாமே? இப்போது கொதிக்கும் நடிகர்களும்,
இயக்குநர்களும் இதற்கு முன் சில படங்கள் தடை விதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள்?
மகாத்மா காந்தியைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த
நாதுராம் கோட்சே. ஆனால், பழியை முதலில் முஸ்லிம்கள் மீதுதானே போட்டனர். அதேதான்
விஸ்வருப விவகாரத்திலும் நடக்கிறது'' என்று வெடித்தார்.
எஸ்.டி.பி.ஐ.
கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, ''படத்தில் முஸ்லிம்களின் உணர் வைப்
பாதிக்கும் விதத்தில் காட்சிகள் இருந்தது. ஆரம்பத்திலேயே இதுபற்றி கமல் பேசி
இருந்தால், பிரச்னை இந்த அளவுக்கு வெடித்து இருக்காது. தன்னுடைய வியாபாரத்தில் ஒரு
பிரச்னை என்று வந்ததும் இந்தியாவை மதச் சார்புள்ள நாடு என்கிறார். நாங்கள்
எல்லோரும் இங்கே இருக்கும் எல்லோருடனும் சகோதர்களாகத்தான் பழகி வரு கிறோம். கமல்
தன்னுடைய வியாபாரத்துக்காக எங்கள் உணர்வுகளை உரசிப்பார்க்க வேண்டாம்'' என்கிறார்
கோபத்தோடு.
சாந்தியும்
சமாதானமும் நிலவட்டும்
thedipaar thanks
|
No comments:
Post a Comment