
February 21, 2013 05:57 pm
இலங்கை
போர் குற்றம் தொடர்பான சேனல் 4 புதிய
ஆவண படத்தை வெளியிட்ட அதன் இயக்குனர் கெல்லம் மெக்கரே கூறியுள்ளதாவது:-
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இந்த ஆவணப்படத்தை வெளியிடுவேன். இந்த படத்தின் பல்வேறு புதிய காட்சிகளும், போரின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த
ஆவண படத்தின் முக்கிய காட்சிகளை அடுத்த வாரம் டெல்லியில் இந்திய எம்.பி.க்கள் குழுக்களுக்கு போட்டு காண்பிப்பேன். இந்த
ஆவணப்படம் இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கான முழு ஆதாரமாக
இருக்கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க்குற்றங்கள் நடந்தது என்பது
தெளிவாக தெரியும்.
இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்க
நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை அந்த மண்ணில் ரத்தம்
சிந்தப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். நாங்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்த படத்தை தயாரித்துள்ளோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது
சிங்களர்களும்,
சிங்கள பத்திரிகையாளர்களும் இதற்கு உதவியுள்ளனர். நடந்த
போர்க்குற்றங்களுக்கு இன்னும் சாட்சிகள் உள்ளன. அவர்கள்தான் இலங்கை ராணுவத்தின்
தாக்குதலில் இருந்து தப்பியவர்கள்.
போர்க்களத்தில் இறந்தவர்கள், ராணுவ
வீரர்கள் ஆகியோரால் கைவிடப்பட்ட செல்போன்கள், கேமராக்கள் என ஆயிரக்கணக்கில் எங்களிடம்
ஆவணங்களும், சாட்சிகளும் உள்ளன. இவற்றின் உண்மைத் தன்மையை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் பதவியில்
நீடிப்பதால் அவர்கள் இந்த ஆவணங்கள் அனைத்தும் பொய் என்று மறுப்பார்கள். இவ்வாறு
அவர் கூறினார்.
thamilan thanks
No comments:
Post a Comment