அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 February 2013

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல் - 30 பேர் பலி


சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல் - 30 பேர் பலி
February 21, 2013  03:02 pm
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். தலைநகர் டமாஸ்கஸ்-க்கு அருகே நேற்று இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.


இதில் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து நாசமானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதற்கு முன்பாக தலைநகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் ராணுவத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து பல மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர்.

சிரியாவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆய்வு செய்த ஐ.நா. விசாரனைக்குழு அந்நாட்டில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பிலும் அதிகளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இருதரப்புக்குமான சண்டையில் இதுவரை 70 ஆயிரம்பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐநா., ஆய்வுக்குழு நேற்று முன்தினம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

thamilan thanks

No comments:

Post a Comment