
February
23, 2013 10:36 am
அமெரிக்காவில் கடந்த சில வாரத்திற்கு முன்பு
நியூயார்க், கனெக்டிக்கட் உள்பட பல மாநிலங்களில் பனிப்புயல் வீசியதால் கடும் பாதிப்பு
ஏற்பட்டது. தற்போது அங்குள்ள மத்தியமேற்கு பகுதியில் பனிப்புயல் வீச
தொடங்கியுள்ளது. இதனால் மினிசோட்டா முதல் ஒயோ வரையில் கடுமையாக பனி
கொட்டுகிறது.
டெக்சாஸ், ஜார்ஜியா பகுதியில் இடி முழக்கத்துடன் பனிப்புயல் வீசியது. கான்சாஸ் பகுதியில் பல இடங்களில் 38சென்டி மீட்டர் அளவிற்கு பனிபொழிந்தது. கான்சாஸ் சிட்டியில் மணிக்கு 2-3 அங்குலம் பனி கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி கொட்டி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் கார்கள் பனிக்கட்டிக்குள் புதைந்து கிடக்கின்றன.
மேலும் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டு,சுமார் 350 விமான சேவை ரத்து செய்யப்பட்டன. கடும் மூடுபனியினால் ஏற்பட்ட விபத்துகளில் 19 வயது பெண்ணும், மற்றொரு வாலிபரும் இறந்தனர். மேலும் இந்த பனிப்புயல் வார இறுதியில் கிழக்கு கடற்கரை பகுதிக்கு நகர்ந்து சென்று நியூ இங்கிலாந்து, கனெக்டிக்கட், மைனி ஆகிய இடங்களில் பனி கொட்டக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment