அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 February 2013

ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா?



Hyderabad-blast-AP1
ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த  குண்டுவெடிப்பு சம்பவத்தில் ‘ஹிந்துத்துவா’ தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது உளவுத்துறையினரும், ஊடகத்துறையினரும் கூறியது போலவே முதலில் ஹூஜி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற முகவரி இல்லாத தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இக்குண்டுவெடிப்பு குறித்த தீவிர விசாரணையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டதால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  பின்னர் தேசியப் புலனாய்வு ஏஜன்சி (NIA) ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது.
தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. இருப்பினும் இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தான் என்பதை சமீபத்திய விசாரணை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதனை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவும், முன்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.thoothuonline thanks

No comments:

Post a Comment