நடு வானில் பறந்த விமானத்தில் இரண்டரை மணி நேரம் தூங்கிய விமானி மீது நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013,
தூங்கி கொண்டிருந்த
விமானியை அவரது அறையில் பூட்டி விட்டு சென்ற, சக விமானி மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது விமானிகள் தூங்குவது
அதிகரித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு செப்ரெம்பரில் நெதர்லாந்தின் "டிரான்ஸ்சேவியா" என்ற விமானம்
நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
சக விமானி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார்.
இவருடன் இருந்த மற்றொரு விமானி, அறையை பூட்டி கொண்டு கழிப்பறைக்கு சென்று
விட்டார்.
இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் விமானி அறைக்கு வந்த போது அந்த விமானி
எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.
கதவை திறக்க முடியாததால் "இன்டர்காம்" வழியாக திறக்க சொல்லியிருக்கிறார்.
"இன்டர்காம்" ஒலித்ததை கேட்டு தூங்கி எழுந்த சகவிமானி கதவை திறந்தார்.
குறித்த இரண்டரை மணி நேரமும் விமானம் தானாகவே பறந்து கொண்டிருந்தது. இந்த
சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
பொறுப்பில்லாமல் தூங்கிய விமானி மற்றும் குறித்த அறையை பூட்டி சென்ற மற்றொரு
விமானி என இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், விமானிகளில் 10
பேரில் நான்கு பேர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கத்தான்
செய்கிறார்கள்.
நீண்ட நேர பணியின் காரணமாக தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றனர்.
No comments:
Post a Comment