அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 04.02.2013 அன்று திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் ‘மனு ஸாஸ்திர எதிர்ப்பு” - சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. அதில் உரையாற்ற சென்றபோது மாநாட்டு மேடையில் சர்ச்சைக்குரிய திருமணம் நடந்த நேரத்தில் மேடையில் இருந்ததை நினைத்து மிகவும் வருந்தினேன். நான் இருந்தது தவறு உடனே மாநாட்டு மேடையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று பல சகோதரர்கள் கருத்து சொன்னார்கள். நானும் தவறு செய்து விட்டோமோ என்று பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
நாம் என்னதான் இஸ்லாம் பற்றி விளக்கி பேசினேன் என்று சொன்னாலும் அவையெல்லாம் சமுதாய மக்களை திருப்திபடுத்தவில்லையே என்ற கவலை என்னை வாட்டியது.
மார்க்கத்திற்கு முரணான திருமணம் அங்கே நடந்தபோது அமைதி காத்து விட்டோமே என்ற மன உறுத்தல் இருந்தாலும், சுயநலத்திற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்லாமல் “அல்லாஹ்வின் மார்க்கமே உயர்ந்தது, அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் உயர்ந்தது மனு தர்மத்தை எதிர்பதிலாகட்டும், தீண்டாமை கொடுமைகளை ஒழிப்பதிலாகட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட சிறப்பான தீர்வை யாராலும் சொல்ல முடியாது” என்பதை ஆயிரத்திற்கும் அதிகமான இறைவனை ஏற்காத மக்கள் கூடியிருந்த சபையில் அழுத்தமாக பதிவு செய்தேன். அதனை என் ரப்பு அறிவான். அப்படி அறிந்ததால் தான் இன்று தீர்வையும் தந்துள்ளான்.
அது மணமகன் மாணிக்கம் சத்திய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று மாலிக் என்று பெயர் பூண்டுள்ளார்” என்ற செய்தி கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்.
13.02.2013 அன்று இரவு விழுப்புரம் (தெற்கு) த.மு.மு.க. மாவட்ட மக்கள் தொடர்பாளர் (P.சு.ழு) சகோதரர் சங்கராபுரம் முபாரக் முகநூலில் நண்பர் வட்டத்தில் உள்ளவர். இவர்தான் மணமகன் இஸ்லாத்தை தழுவிய தகவலை சொன்னார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணையும் மணமகனையும் மாநாட்டு மேடைக்கு அழைத்து வந்த சங்கராபுரத்தை சேர்ந்த தமிழர் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் P. ரவியை என்னிடம் செல்போனில் தொடர்பு கொள்ள வைத்தார்.
தோழர் ரவி என்னிடத்தில் பேசியபோது ‘அய்யா நீங்கள் அந்த மாநாட்டு மேடையில் இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் முன்கூட்டியே திருமணம் தொடர்பான எந்த தகவலும் சொல்லவில்லை. மாநாட்டு மேடையில் உங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சிக்கு ஆளானேன். உங்களது மாநாட்டு உரைக்கு பிறகு நான் அந்த தம்பியிடம் நீ இஸ்லாத்தில் இணைந்து விடுகிறாயா என்று கேட்டேன் அவரும் உடனே ஒப்புக் கொண்டார். பிறகு சட்ட ரிதியாக இஸ்லாத்தில் இணைய (அபிடவிட்) நோட்டரி வழக்கறிஞர் மூலம் சான்றிதழ் பெற்றேன். பிறகு சென்னை மண்ணடியில் இருவருக்கும் இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்து வைத்தேன்” என்று சொன்னார். (அல்ஹம்து லில்லாஹ்)
‘அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்துள்ளான்”
உள்ளங்களை புரட்ட கூடியவன் அல்லாஹ் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் மீண்டும் உண்மைப்படுத்தினான்.
மாணிக்கத்திற்கு இஸ்லாமிய பெண் மூலம் முத்தான சத்திய மார்க்கத்தை வழங்கிய அல்லாஹூக்கே புகழ் அனைத்தும், இதில் அல்லாஹ்வின் அடிமையான என்னுடைய தலை உருட்டப்பட என்ன காரணமோ அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
இப்பிரச்சனையில் என் தவறை சமுதாய மற்றும் இயக்க நலனுக்கா சுட்டிக் காட்டும் நோக்கோடு செயல்பட்ட சகோதரர்களுக்கு என் நன்றி ஜசாகல்லாஹ்... ஹைர்.
குறிப்பு: திருமண சான்று மற்றும் இஸ்லாத்தை ஏற்றதற்கான சான்றிதல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வஸ்ஸலாம்
அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்
(த.மு.மு.க)
Last Updated ( Friday, 15
February 2013 23:28 ) கடந்த 04.02.2013 அன்று திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் ‘மனு ஸாஸ்திர எதிர்ப்பு” - சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. அதில் உரையாற்ற சென்றபோது மாநாட்டு மேடையில் சர்ச்சைக்குரிய திருமணம் நடந்த நேரத்தில் மேடையில் இருந்ததை நினைத்து மிகவும் வருந்தினேன். நான் இருந்தது தவறு உடனே மாநாட்டு மேடையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்று பல சகோதரர்கள் கருத்து சொன்னார்கள். நானும் தவறு செய்து விட்டோமோ என்று பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
நாம் என்னதான் இஸ்லாம் பற்றி விளக்கி பேசினேன் என்று சொன்னாலும் அவையெல்லாம் சமுதாய மக்களை திருப்திபடுத்தவில்லையே என்ற கவலை என்னை வாட்டியது.
மார்க்கத்திற்கு முரணான திருமணம் அங்கே நடந்தபோது அமைதி காத்து விட்டோமே என்ற மன உறுத்தல் இருந்தாலும், சுயநலத்திற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்லாமல் “அல்லாஹ்வின் மார்க்கமே உயர்ந்தது, அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் உயர்ந்தது மனு தர்மத்தை எதிர்பதிலாகட்டும், தீண்டாமை கொடுமைகளை ஒழிப்பதிலாகட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட சிறப்பான தீர்வை யாராலும் சொல்ல முடியாது” என்பதை ஆயிரத்திற்கும் அதிகமான இறைவனை ஏற்காத மக்கள் கூடியிருந்த சபையில் அழுத்தமாக பதிவு செய்தேன். அதனை என் ரப்பு அறிவான். அப்படி அறிந்ததால் தான் இன்று தீர்வையும் தந்துள்ளான்.
அது மணமகன் மாணிக்கம் சத்திய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று மாலிக் என்று பெயர் பூண்டுள்ளார்” என்ற செய்தி கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்.
13.02.2013 அன்று இரவு விழுப்புரம் (தெற்கு) த.மு.மு.க. மாவட்ட மக்கள் தொடர்பாளர் (P.சு.ழு) சகோதரர் சங்கராபுரம் முபாரக் முகநூலில் நண்பர் வட்டத்தில் உள்ளவர். இவர்தான் மணமகன் இஸ்லாத்தை தழுவிய தகவலை சொன்னார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணையும் மணமகனையும் மாநாட்டு மேடைக்கு அழைத்து வந்த சங்கராபுரத்தை சேர்ந்த தமிழர் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் P. ரவியை என்னிடம் செல்போனில் தொடர்பு கொள்ள வைத்தார்.
தோழர் ரவி என்னிடத்தில் பேசியபோது ‘அய்யா நீங்கள் அந்த மாநாட்டு மேடையில் இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் முன்கூட்டியே திருமணம் தொடர்பான எந்த தகவலும் சொல்லவில்லை. மாநாட்டு மேடையில் உங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சிக்கு ஆளானேன். உங்களது மாநாட்டு உரைக்கு பிறகு நான் அந்த தம்பியிடம் நீ இஸ்லாத்தில் இணைந்து விடுகிறாயா என்று கேட்டேன் அவரும் உடனே ஒப்புக் கொண்டார். பிறகு சட்ட ரிதியாக இஸ்லாத்தில் இணைய (அபிடவிட்) நோட்டரி வழக்கறிஞர் மூலம் சான்றிதழ் பெற்றேன். பிறகு சென்னை மண்ணடியில் இருவருக்கும் இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்து வைத்தேன்” என்று சொன்னார். (அல்ஹம்து லில்லாஹ்)
‘அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்துள்ளான்”
உள்ளங்களை புரட்ட கூடியவன் அல்லாஹ் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் மீண்டும் உண்மைப்படுத்தினான்.
மாணிக்கத்திற்கு இஸ்லாமிய பெண் மூலம் முத்தான சத்திய மார்க்கத்தை வழங்கிய அல்லாஹூக்கே புகழ் அனைத்தும், இதில் அல்லாஹ்வின் அடிமையான என்னுடைய தலை உருட்டப்பட என்ன காரணமோ அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
இப்பிரச்சனையில் என் தவறை சமுதாய மற்றும் இயக்க நலனுக்கா சுட்டிக் காட்டும் நோக்கோடு செயல்பட்ட சகோதரர்களுக்கு என் நன்றி ஜசாகல்லாஹ்... ஹைர்.
குறிப்பு: திருமண சான்று மற்றும் இஸ்லாத்தை ஏற்றதற்கான சான்றிதல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வஸ்ஸலாம்
அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்
(த.மு.மு.க)
No comments:
Post a Comment