அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 24 February 2013

இந்த செய்திக்கு என்ன தலைப்பு போடுறது??


இந்த செய்திக்கு என்ன தலைப்பு போடுறது???


February 24, 2013  03:05 pm
45 வயதுப் பெண்மணி தன்னைவிட 15 வயது குறைந்த வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தார்.இதை அறிந்த அந்தப் பெண்ணின் மருமகன் தனது மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த 45வயதுப் பெண் வாலிபரை உதறினார் .இதனால் ஏமாற்றமடைந்த அந்த வாலிபர் பொலிஸ் நிலையத்தில் வந்து அப்பெண்ணை தன்னிடமி்ருந்து பிரிக்கக் கூடாது என்று கெஞ்சியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய்.30 வயதான இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது பன்னீர்செல்வம் என்பவரின் மனைவியான 45 வயது சசிகலாவுடன் தொடர்பு ஏற்பட்டது. சசிகலா தனது மகள் ஜோதியை ஏற்கனவே தினேஷ் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். வயது வித்தியாசம் பார்க்காமல், மகள் இருப்பதை மறந்து விட்டு விஜய்யுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார் சசிகலா.


இந்த நிலையில் விஜய்க்கு வேலைஇலல்லாமல் போகவே இருவரும் விஜய்யின் சொந்த ஊருக்குப் போனார்கள். அங்கு போய் குடித்தனத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் ஜோதியின் கணவர் தினேஷுக்கு தனது மாமியாரின் செயல் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. இதையடுத்து தனது மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தாயிடம் திரும்பி வந்த ஜோதியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சசிகலா. அவருக்குப் புத்தி வந்தது இதையடுத்து ஆம்பூர் அனைத்து மகளிர்காவல்நிலையத்திற்குப்போய் விஜய்யிடமிருந்து தன்னைப் பிரித்து வைக்குமாறு கோரினார். பொலிஸாரும் விஜய்யை அழைத்துப் பேசினர். ஆனால் தன்னால் சசிகலா இல்லாமல் வாழ முடியாது என்று கெஞ்சினார் விஜய். இதையடுத்து பொலிஸார் விஜய்யை சமாதானப்படுத்திப் பார்த்தனர். இந்த விவகாரம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


thamilan thanks

No comments:

Post a Comment