ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த,
மூன்று பேருக்கு,
நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில்
ஒன்றான, ஜப்பானில்,
மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன.
கொடூர
குற்றவாளிகளுக்கு கூட, மரண
தண்டனை விதிக்கக் கூடாது என,
அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும்,
மிக கொடூர குற்றவாளிகளுக்கு,
மரண தண்டனை விதிப்பதை,
ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை
நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும்,
இன்னமும்,
தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது.
|
அந்நாட்டில் புதிய அரசு,
கடந்த,
டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு,
நேற்று தான்,
முதல் முறையாக,
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. நேற்று அதிகாலை,
மூன்று வெவ்வேறு இடங்களில்,
மூன்று கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பொதுவாக,
தூக்கு தண்டனை கைதிகளுக்கு,
தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவலை,
ஜப்பான் தெரிவிப்பதில்லை. எனினும்,
புதிய அரசு,
நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்நாட்டில்,
இதற்கு முன்,
கடந்த செப்டம்பரில் தான்,
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்னும், 134
பேர்,
தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.
thamilan thanks
|
No comments:
Post a Comment