அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 22 February 2013

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!


Friday, 22 February 2013 23:45 administrator

E-mail Print PDF
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பார்க்காமல் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் இக்கொடூரத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவின் தம்பி கோத்தய ராஜபக்சேவின் உத்தரவின் பேரிலேயே அச்சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். இக்கொடூரச் சம்பவத்தை உலகிற்கு வெளிப்படுத்திய ஆவணப்பட இயக்குனரான கலாம் மேக்ரே, உலகப் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியாவார். இவர் ஏற்கனவே அல்ஜீரியா, போஸ்னியா, பாலஸ்தீனம் நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியவர்.
பாலச்சந்திரனை மிக அருகில் நின்று ஈவு இரக்கமின்றி 5 துப்பாக்கி ரவைகள் மூலம் கொன்ற கொடூரம், உலகின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. இதேபோன்று எண்ணற்ற தமிழ் சிறுவர் சிறுமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் நம்பகமான ஆதாரங்கள் உள்ளது.
எனவே, இலங்கையின் இனப்படுகொலைகளை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றாக, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கைதாகினர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் நடைபெறும் விசாரணையில் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் போர்க்குற்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று முற்றுகையின் போது பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.
இம்முற்றுகைப் போரில் மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநிலச் செயலாளர் மீரான் மைதீன், இயக்குனர் புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைதாகினர்.





Last Updated ( Saturday, 23 February 2013 00:16 ) 

No comments:

Post a Comment