
February
16, 2013 12:38 pm
வெனிசுலா ஜனாதிபதியான ஹூகோ சாவேஸ் (வயது
58). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து
கொண்டார். இந்த
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தது. எனவே அவருக்கு கடந்த இரண்டு
மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக துணை ஜனாதிபதி நிக்கோலஸ்
பிப்ரவரி 14-ம்தேதி செய்தி வெளியிட்டு இருந்தார்.
சாவேசின் உடல்நிலை குறித்து தகவல்களை அரசு மிக ரகசியமாக
வைத்திருப்பதாக அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அதிபர் சாவேசின்
புகைப்படங்களை வெனிசுலா அரசு வெளியிட்டுள்ளது.
அவர்
இருக்கும் இரண்டு
புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றில் அவர் வீங்கிய முகத்துடன் சிரித்தபடி காட்சியளிக்கிறார். மற்றொரு படத்தில்
அவருடைய இரண்டு மகள்கள்
மரியா கேப்ரியலா மற்றும் ரோசா வேர்ஜினியா ஆகியோருடன் உள்ளார்.
தற்போது
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் மூச்சுக்குழாய் மூலம் சுவாசிப்பதாக
வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment