[ திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013, 03:14.23 பி.ப GMT ]
குடும்ப நலதிட்டத்திற்காக ஜேர்மனி அரசாங்கம் பல மில்லியன் யூரோக்களை செலவழிக்கத்
தயாராக இருந்தபோதிலும், இதனால் பொதுமக்களுக்கு எந்த வித பலனும் இல்லை என அரசு
ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
கணவன், மனைவியாக வாழும் குடும்பங்களுக்கு வரிச்சலுகையும், மருத்துவக்
காப்பீட்டுக் கட்டணமும் வழங்க தீர்மானித்துள்ளது.
மேலும் பெண்கள் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள குழந்தைகள்
காப்பகங்களை நிறுவ அரசு முன்வந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களுக்காக
செலவழிக்கப்படும் நிதியில் 48% வீணாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இத்திட்டத்தால் விரும்பத்தகாத விளைவுகளே ஏற்படும் என்றும் இத்திட்டம் வீண்
முயற்சியே எனவும் அரசு ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment