|
14 February 2013
|
![]()
கர்நாடக மாநிலம்
பாலாறு அருகே கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கண்ணிவெடி
தாக்குதல் நடத்தினார்கள். இதில் கர்நாடகாவைச் சேர்ந்த 22 போலீஸ்காரர்கள்
கொல்லப்பட்டனர்.
வீரப்பனின்
கூட்டாளிகளான ஞானப்பிரகாஷ், சைமன், மீசை மாதையன், பலவேந்திரன் ஆகிய 4 பேர் இது
தொடர்பாக கைது செய்யப்பட்டனர். மைசூர் தடா கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து 4
பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து 4
பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவர்களது
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக உயர்த்தி கடந்த 2004-ம் ஆண்டு
உத்தரவிட்டது.
இதையடுத்து 4
பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்த
அந்த மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனால் வீரப்பன்
கூட்டாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம்
பெல்காம் சிறையில் அவர்கள் 4 பேரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஜெயிலில்
இட பற்றாக்குறை காரணமாக 4 பேரும் ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
கூறியிருந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி அவர்களது கருணை மனுவை நிராகரித்ததும், 4
பேரும் வேறு தனிதனி அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
பெல்காம்
சிறைக்குள் அவர்கள் 4 பேரையும் தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று 4
பேரின் உடல் எடை அளவு தாங்கும் சக்தி கொண்ட மணல் மூடை வைத்து தூக்கு மேடையில்
ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஜெயில் விதிப்படி
தூக்கு மேடையை ஒருவாரத்துக்கு முன்பே தயார் நிலையில் வைப்பார்கள். அதன்படி பெல்காம்
சிறையில் உள்ள தூக்கு மேடை தயாராக உள்ளது.
4 பேரும் ஒரே
ஜெயிலில் தூக்கிலிடப்படுவார்களா அல்லது வேறு ஜெயில்களில் தூக்கில் போடப்படுவார்களா
என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
தூக்கில்
போடுவதற்கான கயிறை ஒவ்வொரு முறையும் பிரத்யேகமாக தயாரித்து வாங்குவார்கள். வீரப்பன்
கூட்டாளிகளை தூக்கிலிடவும் விசேஷ கயிறு வாங்கி தயாராக
வைக்கப்பட்டுள்ளது.
முகத்தை மூடி
அணியும் கருப்பு துணியும் வாங்கப்பட்டுவிட்டது. தற்போது மேலிட உத்தரவுக்காக
அதிகாரிகள் காத்து கொண்டிருக்கிறார்கள். உத்தரவு வந்த உடனே தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
thedipaar thanks
|
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 14 February 2013
வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட ஏற்பாடுகள் தயார். ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment