அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 25 February 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது!


=

Another Gujarat cop arrested in Ishrat encounter case
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காந்தி நகர் ஸ்பெஷல் ஆபரேசன் க்ரூப்(எஸ்.ஏ.ஜி)  சப் இன்ஸ்பெக்டர் பரத் பட்டேலை சி.பி.ஐ கைது செய்தது. பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை ஏற்கனவே இவ்வழக்கில் கைதான துணை எஸ்.பி தருண் தாரோட்டையும் இவருடன் சேர்த்து சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மெட்ரோ பாலிடன் மாஜிஸ்ட்ரேட் எ.யு.ஜஜாரு இவர்கள் இருவரையும் சி.பி.ஐ கஸ்டடியில் வைக்க உத்தரவிட்டார்.
2007-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்சின் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பட்டேல். இவரை 14 தினங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ நீதிமன்றத்தில் கோரியது. இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட அம்ஜத் அலி அக்பர் ராணாவை போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் பட்டேல் என்று சி.பி.ஐ கண்டுபிடித்தது.

thoothuonline thanks

No comments:

Post a Comment