அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 25 February 2013

7 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட். விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.


www.thedipaar.com
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது சதீஷ்தவான் விண்வெளி மையம்.இங்குள்ள  ஏவுதளத்தில் இருந்து தான் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை அனுப்பி வருகின்றனர்.


பி.எஸ்.எல்.வி. சி 20

இந்தியா இதுவரை 22 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி உள்ளது. பி.எஸ்.எல்.வி. வரிசையில் 23வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் சாதனை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.முதலாவது ஏவுதளத்தில் இருந்து 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 20 ராக்கெட் நேற்று மாலை 5.56 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான 56 மணி நேர கவுண்ட்டவுன் 23ந் தேதி காலை 6.56 மணிக்கு தொடங்கியது.பருவநிலை காரணமாக நேற்று மாலை 6 மணி ஒரு நிமிடத்துக்கு இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

இதனை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மத்திய மந்திரி நாராயணசாமி, ஆந்திரா கவர்னர் நரசிம்மன், முதல்மந்திரி கிரண்குமார் ரெட்டி, மற்றும் உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.ராக்கெட் இலக்கை சென்றடைந்ததும், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். அதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ)  தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 ராக்கெட் விண்ணில் சீறி பாய்வதை பார்ப்பதற்காக ராக்கெட் ஏவுதளத்தைச்சுற்றி அமைந்திருந்த வீடுகளின் மொட்டை மாடியில் மக்கள் திரளாக கூடியிருந்தனர். ராக்கெட் விண்ணில் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதுபற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

விண்ணில் சீறி பாய்ந்தது

ராக்கெட் ஏவக்கூடிய கடைசி நிமிடத்தில் ஒவ்வொரு வினாடியும் அறிவிப்பு செய்தபோது, அதனை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பரபரப்புடன் காணப்பட்டனர். நேற்று மாலை சரியாக 6 மணி ஒரு நிமிடத்துக்கு பி.எஸ்.எல்.வி. சி.20 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது.வெண்புகையை கக்கியபடியும், இடிமின்னல் போன்ற பலத்த சத்தத்துடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஜனாதிபதி உட்பட அனைவரும் ராக்கெட்டின் விண்வெளி பாதையை டிஜிட்டல் திரையில் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ராக்கெட் ஏந்திச் சென்ற இந்தியபிரான்சு நாடுகள் இணைந்து தயாரித்துள்ள 400 கிலோ எடை கொண்ட சரள் என்ற பிரதான செயற்கைக்கோள் ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடங்கள் 59 வினாடிகளில் அதற்குரிய விண்வெளி பாதையில் பிரிந்து சென்றது.

6 துணை செயற்கைக்கோள்களுடன்

அதையடுத்து 6 துணை செயற்கைக்கோள்கள், ஒன்றன்பின் ஒன்றாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றன. அனைத்து செயற்கை கோள்களும் ராக்கெட் புறப்பட்ட நேரத்தில் இருந்து 21 நிமிடம் 46 வினாடிகளில் 781 கிலோ மீட்டர் தொலைவில், புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.சரள் என்ற பிரதான செயற்கைக் கோள் கடல் நீரின் போக்கினையும், அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும் துல்லியமாக கண்காணிக்க பயன்படும். சுற்றுச்சூழல் பற்றி தெரிந்து கொள்வதற்கும், தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுகிறதா? என்பதைக் கண்காணிக்கவும் இந்த செயற்கை கோள் ஒரு சாதனமாக பயன்படும்.

பயன்பாடு என்ன?

சரள் செயற்கைக்கோள் தரும் புள்ளிவிவரங்களை, கடல் சார் வானிலை, தட்பவெப்பநிலை, பருவநிலை கண்காணிப்பு, கடல், பூமி, கண்டத்தின் பனிக்கட்டிகள், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
சரள் செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள  கனடா நாட்டின் 140 கிலோ எடைகொண்ட சபையர் என்ற செயற்கைகோள் புவிவட்ட பாதையில் 19.01 நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் இருந்து பூமியை பல்வேறு பரிமாணங்களில் படம் பிடிக்கும்.

நியோ சாட்

கனடா நாட்டின் 74 கிலோ எடை நியோசாட் 19.24 நிமிடங்களில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமிக்கு அருகில் காணப்படும் சூரியனைச் சுற்றிவரும் குறுங்கோள் மற்றும் செயற்கைக்கோள்களை ஆய்வு செய்யும்.டென்மார்க் நாட்டின் அல்போர்க் பல்கலைக்கழகத்தின் 3 கிலோ மிகச்சிறிய எடைகொண்ட என்.எஸ்.8.3 (ஆயுசாட் 3) என்ற செயற்கைக்கோள் 20.01 நிமிடத்தில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது ஆர்டிக் பனிப்பகுதியில் கப்பல்களில் இருந்து தானியங்கி சமிக்ஞைகளை பெறுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும்.

நட்சத்திரங்களை ஆய்வு

ஆஸ்திரியா நாட்டின் கிரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ்.8.2. (பிரைட்) என்ற செயற்கைக்கோள் 20.15 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது வானில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை ஆய்வு செய்யும்.ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலைக்கழகத்தின் 14 கிலோ எடை கொண்ட என்.எல்.எஸ். 8.1 (யுனிபிரைட்) என்ற செயற்கைகோள் 21.18 நிமிடங்களில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது நட்சத்திரங்களின் வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும்.

56வது செயற்கை கோள்

இங்கிலாந்து நாட்டின் 6.5 கிலோ எடை கொண்ட ஸ்டாண்ட்1 என்ற செயற்கைகோள் 21.46 நிமிடத்தில் கடைசியாக, புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. சரள் செயற்கைக்கோள் உட்பட 7 செயற்கைகோளும், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் புறப்பட்ட 21.46 நிமிடங்களில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்திய 56வது செற்கைக்கோள் சரள் என்பது குறிப்பிடத்தக்கது.

news thedipaar thanks


No comments:

Post a Comment