சமையல் செய்ய காஸ்
சிலிண்டர் ஏற்பாடு செய்யாததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனை சுட்டுக்
கொன்றார்.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் ஆசிப் கான்; லாரி ஒட்டுனர்.
இவரது மனைவி நாஜியா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில
நாட்களாக, அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களின்
வீட்டில், சமையல் காஸ் தீர்ந்து விட்டது. வேறு சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யும்படி,
நாஜியா பல முறை கேட்டும், ஆசிப்கான் அதை காதில் வாங்கவில்லை. இதனால், கடும்
கோபத்தில் இருந்த நாஜியா, நேற்று காலை, தன் கணவன், ஆசிப்கானை சுட்டுக் கொன்றார்.
தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, நாஜியாவை கைது செய்தனர்.
இது
தொடர்பாக போலீசார் கூறியதாவது:ஆசிப்கான், ஏற்கனவே திருமணமானவர். இரண்டாம்
தாரமாக, நாஜியாவை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில
நாட்களாக சரியில்லை. நேற்று முன்தினம் இரவு, காஸ் தீர்ந்து, சமையல் செய்ய
முடியாமல், பசியுடன் படுக்க நேரிட்டதால், கடும் கோபம் அடைந்துள்ள நாஜியா, நேற்று
காலை, கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கி
வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை
மிரட்டியுள்ளார். அந்த துப்பாக்கியே, அவருக்கு வினையாகி விட்டது. லாரி ஓட்டுனரான
ஆசிப் கானுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்
.thedipaar thanks
|
No comments:
Post a Comment