அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 February 2013

பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!



E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்தது. முல்லிவாய்க்காலும் முள்வெளி முகாம்களும் உலகம் உள்ளளவும் அதனை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
இலங்கை சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேவ்ண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பினும் அப்பாவித் தமிழனின் அழுகுரல் இந்த பூமிப்பந்தில் யாருக்கும் எட்டவில்லை. இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் தமிழர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.
சானல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற பயங்கரங்களை அம்பலப்படுத்தியது. இருப்பினும் இலங்கை சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் அதே சானல் வெளியிட்ட புகைப்பட ஆவணம் மனித மனம் கொண்ட அனைவரையும் கலங்க வைத்துள்ளயது, கதற வைத்துள்ளது. 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட விதம் இலங்கையின் இரக்கமற்றத் தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இன்னும் ஏன் இலங்கை, போர்க்குற்ற விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. ராஜபக்சேயும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேயும் இன்னும் ஏன் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை என்ற வினாக்கள் சர்வதேச அளவில் எழும்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா முழுமுயற்சி எடுக்க வேண்டும். மனிதகுல விரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும்.


(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

No comments:

Post a Comment