
வெனிசுலா ஜனாதிபதியான ஹூகோ சாவேஸ் (வயது 58)புற்று நோய்க்கு கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து
கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து
சிக்கல்கள் இருந்து வந்தது. எனவே அவருக்கு புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு
வருவதாக துணை அதிபர் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.
சோசலிச தலைவரான ஹூகோ சாவேஸ்க்கு கடந்த 18 மாதங்களில் 4
முறை புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவை எதுவும்
பலனளிக்காததால் மிகச் சிக்கலான புதிய சிகிச்சையை கடந்த 2மாதமாக அவருக்கு அளித்து வருவதாக துணை
அதிபர் நிக்கோலஸ் தெரிவித்தார்.
அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை வெளியிட நிக்கோலஸ்
மறுத்துவிட்டார். அதிபரின் உடல்நிலை குறித்த விவரங்களை மிக ரகசியமாக வைத்திருப்பதாக
அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிக்கலான இந்த சிகிச்சையின்
விவரங்கள் தெரியாது என்று அரசு மறுத்துள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment