அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 25 February 2013

சூடானில் ஆயுதம் ஏந்திய பழங்குடியினரிடையே மோதல்: 51 பேர் பலி


தர்பர், பிப். 26-

ஆப்பிரிக்கா நாடான சூடானின் மேற்கு தர்பார் பகுதி தங்கச்சுரங்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது தொடர்பாக பானி ஹூசைன் மற்றும் ரிசைகாட் பழங்குடியினர்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இங்குள்ள ஆயுதம் ஏந்திய இந்த பழங்குடியினரிடையே கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து கடும் சண்டை நடந்து வருகிறது.

இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 1,00,000 பேர் அகதிகளாகியுள்ளனர். சில மாதங்களாக தீவிரமடைந்த இந்த சண்டையை முடிக்க ஒப்பந்தமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாகனங்கள், ஒட்டகங்களில் ஆயுதங்களுடன் சென்ற ஒரு கும்பல் எல்சிரீப் என்னுமிடத்தில் மற்ற பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சர்வதேச நீதிமன்றம் அதிபர் ஒமர் ஹசன் அல் பசீர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதற்கு அவர் கீழ்படிய மறுத்து வருகிறார். தர்பார் பகுதியில் பத்திரிக்கையாளர், தூதுவர்கள், உதவியாளர்களும் யாரும் அனுமதிக்கபடுவதில்லை.

 news  maalaimalar thanks

No comments:

Post a Comment