அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 February 2013

கேரள மகளிர் காங்கிரஸ் தலைவியை பி.ஜே.குரியனுடன் இணைத்து பேஸ் புக்கில் ஆபாச கருத்து. போலீஸ் விசாரணை


  February  2013    
www.thedipaar.comடெல்லி மேல்–சபை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுடன் கேரளா மாநில மகிளா காங்கிரஸ் தலைவியை இணைத்து ஆபாச கருத்தும், அவரது படமும் இணைய தளத்தில் வெளியானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
.

சிக்கலில் பி.ஜே.குரியன்

பாராளுமன்ற மேல்–சபையில் துணைத் தலைவராக இருப்பவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.ஜே.குரியன். கேரளாவில், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை கற்பழித்த வழக்கில் அவரது பெயரும் அடிபட்டது. ஆனால், அவர் மீது வழக்கு தொடரப்பட வில்லை.  கற்பழிக்கப்பட்ட அப்போதைய 16 வயது சிறுமி (இப்போது 33 வயது பெண்) குரியனும் தன்னை கற்பழித்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்தார். இதனால், குரியனுக்கு சிக்கல் வலுத்து வருகிறது.


மகளிர் காங்கிரஸ் தலைவி

கேரளா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா. சில நாட்களுக்கு முன்பு பி.ஜே.குரியனுக்கு ஆதரவாகவும், அவரை பதவி விலகச் சொல்லும் எதிர்க் கட்சியினரை கண்டித்தும் அறிக்கை விட்டிருந்தார். தற்போது அவரையும், பி.ஜே.குரியனையும் இணைத்து ‘பேஸ் புக்’ இணைய தளத்தில் ஆபாச கருத்துக்கள் வெளியாகி உள்ளன. பிந்து கிருஷ்ணாவின் படமும் அந்த இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

முதல்–மந்திரியிடம் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து கிருஷ்ணா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்–மந்திரி உம்மன் சாண்டியிடம் புகார் அளித்தார். அவர் அதை ‘சைபர் கிரைம்’ போலீசுக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, போலீசார், தகவல் தொழில் நுட்ப சட்டம் 66ஏ–வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையை தொடங்கி உள்ளனர். ‘‘இணைய தளத்தில் குரியனையும், பிந்து கிருஷ்ணாவையும் இணைத்து ஆபாச கருத்து வெளியிட்டவர்கள் போலியான முகவரியில் வெளியிட்டு உள்ளனர். தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், யாரும் கைது செய்யப்பட வில்லை. யார் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை’’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவி பேட்டி

இதுகுறித்து மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா கூறியதாவது:– ‘‘குரியன் பிரச்சினையில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத்தான் நான் சொன்னேன். ஆனால், அதற்காக என்னையும், குரியனையும் இணைத்து மிகவும் ஆபாசமாக கருத்து வெளியிட்டு உள்ளனர். இதனால் ஒரு பெண் என்ற முறையில் என் மரியாதையும், மதிப்பும் மிகவும் கெட்டு விட்டது.

140 பேர் கேட்டனர்

இந்த கருத்து வெளியானதில் இருந்து ஏராளமானவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். 140 பேருக்கு மேல் அதை படித்து உள்ளனர். இதுகுறித்து முதல்–மந்திரியிடம் புகார் அளித்தேன். அவர் அதை போலீசுக்கு அனுப்பி வைத்து உள்ளார். போலியான முகவரியில் அந்த ஆபாச கருத்தை வெளியிட்டவரை போலீசார் தேடி வருகிறார்கள். ‘பேஸ் புக்’ நிறுவனத்தாருடனும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

thedipaar thanks

No comments:

Post a Comment