
இறைச்சியில் குதிரை மாமிசம் கலக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பாவில் பல இடங்களில் புகார் எழுந்துள்ள
நிலையில், தென் ஆப்பிரிக்காவில் விற்கப்படும் இறைச்சிப் பொருட்களில் -
அதில் கூறப்பட்டிருக்காத - எருமை, வெள்ளாடு மற்றும் கழுதைகளின் மாமிசம் கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்
ஆப்பிரிக்காவின் ஸ்டிலன்போஷ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் 139 இறைச்சி
உணவுப் பொருட்கள் சோதிக்கப்பட்டன. இதில் 69 பொருட்களில் வேறு மாமிசக் கலப்பு இருந்தது
கண்டறியப்பட்டுள்ளது.
சாசேஜ், பர்கர்
மற்றும் குளிர் மாமிச உணவுகளில் கலப்படம் மிகவும் அதிகமாக இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல
உணவுப் பொருட்களில் பன்றி மாமிசமும், கோழி மாமிசமும் கணிசமாக கலப்படம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை
கலக்கப்பட்டதாக இறைச்சி அடைக்கப்பட்டுள்ள பையில் கூறப்படவில்லை.
மாமிசப்
பொருட்களை தவறாக பெயரிட்டு விற்பது தென் ஆப்பிரிக்காவில் சகஜமாகக் காணப்படுகிறது என்று கூறியுள்ள
இந்த ஆய்வே மேற்கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக
பொருளாதார, மத
மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை
விடப்பட்டுள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment