சீனாவிற்கெதிராக தீக்குளிக்க தூண்டிய புத்த துறவிக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013, 06:13.07 மு.ப GMT ]
சீனாவின் ஆக்கிரமிப்பை
எதிர்த்து திபெத்தியர்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்டோர் தீக்குளித்து பலர் இறந்தனர்.
இந்த தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
சீன அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையில் சிஷூவான் மாகாணத்தில் அபா என்ற இடத்தில் 8 திபெத்தியர்கள்
தீக்குளித்ததில் 3 பேர் இறந்தனர்.
இந்த போராட்டத்தை செல்போன் மூலம் தூண்டி விட்டதாக லோராங் கோன்ஷோக்(வயது 40) என்ற
புத்த துறவி மீதும், அவரது உறவினர் லாசாங் திசெரிங்(வயது 31) ஆகியோர் மீது வழக்கு
தொடரப்பட்டது.
இதை நீதிபதி விசாரித்து புத்த துறவிக்கு மரண தண்டனையும், உறவினருக்கு 10 ஆண்டு
ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் மரண தண்டனையை 2 ஆண்டுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருப்பதால் அது
ஆயுள் தண்டனையாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment