[ ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 12:07.07 பி.ப GMT ]
அமெரிக்காவில் விவாகரத்து
வழக்கில் ஆஜரான சட்டத்தரனி, தன் கட்சிக்காரரான பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதற்கும்
சேர்த்து “பில்” போட்டதால் “சஸ்பெண்ட்” செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள ஏகன் நகரைச் சேர்ந்தவர் சட்டத்தரனி
தாமஸ் லோ (வயது 58).
இவரிடம், கடந்த 2011ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும்
வழக்கில் ஆலோசனை பெற ஒரு பெண் வந்தார்.
இந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட சட்டத்தரனி தாமஸ் பின்பு அவருடன்
செக்ஸ் உறவிலும் ஈடுபட்டார்.
வழக்குக்காக சந்திக்கும் நேரம் தவிர, செக்ஸ் உறவு கொண்டதற்கும் சேர்த்து
சட்டத்தரனி தாமஸ் கட்டணம் வசூலித்துள்ளார்.
இதனால், அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, அவருடனான
உறவைத் துண்டித்துக் கொண்ட தாமஸ் வழக்கில் இருந்தும் விலகிக் கொண்டார்.
நடந்த விவரங்களை இந்த பெண் வெளியில் சொன்னதால் தாமஸ் மீது வழக்கு
தொடரப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டை தாமஸ் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தாமஸ்
சட்டத்தரனி பணியிலிருந்து “சஸ்பெண்ட்” செய்யப்பட்டு உள்ளார்.
No comments:
Post a Comment