ஈராக் பொலிஸ் தலைமையகம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:37.13 மு.ப GMT ]
ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள
கிர்குக் நகரத்தின் பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள் இன்று காலை
துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
அப்போது குண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தீவிரவாதி ஒருவன் அந்த
கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச்செய்தான்.
இதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.
70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கட்டிடம் முழுவதும் உடைந்து சிதைந்து போயின. இருந்தும் அவர்களால் பொலிஸ்
தலைமையகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை.
இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இப்பகுதிகளில்
அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் மற்றும் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் அரசுக்கெதிராக
தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment