அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 2 March 2013

மலேசியாவில் பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல் - 14 பேர் பலி



மலேசியாவின் சாபா மாகாணத்தில் கடந்த 20 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பிலிப்பீனோ சுல்தானின் ஆதரவாளர்களுக்கும்
மலேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் இரு பாதுகாப்புப் படையினரும் 12 பிலிப்பீனோ மக்களும் கொல்லப் பட்டுள்ளனர். இத் தகவலை சாபா மாகாண போலிஸ் கமிசனர் ஹம்சா டாயிப் உறுதி செய்துள்ளார்.


தற்போது குறிப்பிட்ட இடத்தில் 100 இற்கும்  அதிகமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர். மேலும் கலவரத்தை அடக்கும் பணி இன்னமும் தொடர்கின்றது. இவ்வன்முறையில் காயமடைந்த மக்களின் தொகை தெரியப் படுத்தப் படவில்லை.

போர்னியோ தீவில் உள்ள சாபா மாகாணத்தில் தெற்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்து குடியேறிய சுலு சுல்தானின் 200 ஆதரவாளர்கள் கடற்கரையோர கிராமமான லஹாட் டாட்டு இனை தமது பிரதேசமாக 1800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆவணங்களைக் காட்டி சொந்தம் கொண்டாடடினர். இதனையடுத்தே சமீபத்தில் இந்த கலவரம் வெடித்துள்ளது.

74 வயதாகும் சுலு சுல்தான் ஆகிய ஜமாலுல் கிரம் III  முன்பு போர்னியோ தீவின் சில பகுதிகளையும் தெற்கு பிலிப்பைன்ஸ் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது

.4tamilmedia thanks

No comments:

Post a Comment