அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு 4 எம்பிக்கள்தான்!:பெனி பிரசாத் வர்மா சீண்டல்!



மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 4 எம்பிக்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று,
மீண்டும் சமாஜ்வாதிக் கட்சியை சீண்டியுள்ளார், மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா.


மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிகட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இருந்தும் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, சமீபகாலமாக அடிக்கடி சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை சீண்டிக்கொண்டே இருக்கிறார். முதலில் முலாயம் சிங் தீவிரவாதத்துக்கு துணை போகிறார் என்று கூறினார். பின்னர் அப்படி கூறியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்து, குடும்பத்துக்காக உழைக்கும் முலாயம் சிங், எப்படி பொதுநல நோக்குடன்  ஆட்சி நடத்துவார், அரசியலில் இருப்பார் என்று சீண்டினார். இப்போது, மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி வெறும் 4 எம்பிக்கள் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று சீண்டி இருக்கிறார். உத்திரப்பிரதேச மாநிலம் பலராம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பெனி பிரசாத் வர்மா,

"உத்திரப்பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது, சமாஜ்வாதிக் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 4 எம்பிகள் மட்டுமே இருப்பார்கள். அக்கட்சிக்கு அந்த தேர்தலில் இறுதி ஊர்வலம் நடக்கும். உத்திரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டு, 40 இடங்களில் வெற்றி பெறும். சகோதரி  மாயாவதியின் கட்சி 36 இடங்களில் வெற்றி பெறும்.

முலாயம் சிங், சிறுபான்மையினரை  ஏமாற்றி வருகிறார். பாஜகவுடன் மறைமுகமாக உறவு  வைத்துள்ளார்." என்று கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சிக்கு இது பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வதிகட்சியின் செய்தித் தொடர்பாளர், "பெனி பிரசாத் தரம் தாழ்ந்து பேசுகிறார், அவரை அமைச்சர் பதவியில் இருந்து காங்கிரஸ் பதவி நீக்கம் செய்யவேண்டும்." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment