
March ,
2013
இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த
5
சிறுமிகளை, அவர்களது உறவினர் ஒருவர் 2
ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வசாயில் 13, 11, 10, 9
மற்றும் 7 வயது
நிரம்பிய சகோதரிகளே அவர்களது சித்தப்பாவால் 2
ஆண்டுகளாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தினக் கூலிகளாக வேலை
பார்த்து வருகிறார்கள். பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள். அப்போது மூத்த
மகள்தான் வீட்டில் இருந்து தங்கைகளை கவனித்துக் கொள்வாள்.
பகல்
நேரத்தில் சிறுமிகளை பார்க்க அவர்களின் வீட்டுக்கு அவ்வப்போது அவர்களது சித்தப்பா
வருவார். செலவுக்கு பணம் கொடுத்தும் சாக்லெட் வாங்கி கொடுத்தும் பக்கத்தில் உள்ள
உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு அவரது அண்ணன் மகளை கூட்டிச் சென்று பல முறை
பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி உன் பெற்றோரிடம் சொன்னால் அவர்களை கொலை செய்து
விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். கடந்த புதன்கிழமை தன் தங்கை ஒருத்தி
சித்தப்பாவுடன் இருப்பதை அந்த சிறுமி பார்த்தாள்.
தங்கையை
எச்சரிக்கும்போதுதான்,
அவளது 4
தங்கைகளும் சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டிருப்பது
தெரியவந்தது.
உடனே
தனது தாயிடம் நடந்ததை கூறிய மூத்தமகள்,ஒரு
மருத்துவரின் துணையோடு அந்த கொடூர ஆசாமி மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர்.
thamilan thanks
No comments:
Post a Comment