அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 March 2013

வரும் ஏபரல் 15ம் திகதி மாநில முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது!




வரும் ஏப்ரல் 15 ம் திகதி, டெல்லியில் அனைத்து  மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
 இந்த மாநாட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்க உள்ளார்.


 மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. கடந்த முறை மாநாட்டின் போது மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ப.சிதம்பரம் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து, அனைத்து  மாநில முதலமைச்சர்களுடனும், ஆலோசித்து தனித்தனியாக ஒவ்வொரு மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறிந்திருந்தார்.

அப்போது தமிழக முதல்வர் உட்பட சில மாநில  முதல்வர்கள் இந்த தேசிய தீவிரவாத தடுப்பு மையம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பது போல உள்ளது என்றும், இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கருத்து கூறியிருந்தனர். அதன்படி மாநில அரசுக்கு தெரிவித்த பின்னரே விசாரணை நடத்தும்படி, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இம்முறை மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தனித் தனியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment