அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 25 March 2013

6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்ட சபையிலிருந்து தகுதி நீக்கம்

[ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 09:20.12 AM GMT +05:30 ]
தமிழக முதல்வரை சந்தித்த மைக்கேல் ராயப்பனை சட்டசபையில் தாக்கியது தொடர்பாக தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல்வரை சந்தித்து தனது தொகுதிக்கு நன்மை செய்வது தொடர்பாக தே.மு.தி.க எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் பேசியதனால் அக்கட்சி அதிர்ச்சி அடைந்தது.
இது தொடர்பாக பெப்ரவரி 2ம் திகதி சட்டசபையில் விவாதம் முற்றியதில் தே.மு.தி.க., - அ.தி.மு.க., இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு எம்.எல்.ஏ.,க்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனுக்கு அடியுடன் சட்டை கிழிப்பும் நடந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் உரிமை குழு விசாரணைக்கு அனுப்பினார். இது தொடர்பாக எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
தே.மு.தி.க., எம். எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், அருட்செல்வன், செந்தில்குமார், முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோர் ஒராண்டு தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதனை கண்டித்து தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் இடதுசாரி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து சென்னையில் தே. மு. தி. க., வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

newindianews thanks

No comments:

Post a Comment